மே மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

மே மாத ராசி பலன்கள் 2024 - கன்னி

திறமையுடன் செயல்படும் கன்னி ராசி வாசகர்களே!
 
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும். ராசிநாதனின் பார்வை பெறுவதும் ஆற்றலுடன் செயல்படும் நல்ல முன்னேற்றம் உண்டாகும். எதையும் திறமையுடனும், வலிமையுடனும் செயல்படுத்துவீர்கள். உங்களின் நாளாந்த பணிகளை சுறுசுறுப்புடன் செயல்படுத்தி காட்டுவீர்கள்.
 
உங்களின் ராசிக்கு சத்ரு ஸ்தானத்தில் சனி அமர்வதால் உங்களின் மறைமுகமான எதிரிகளின் வாழ்க்கை சூழ்நிலைகளை மாற்றி, எதிர்த்து போராடி, வெற்றி பெறுவீர்கள். உங்கள் மறைவு ஸ்தானத்தில் சூரியன் உச்சமாக அமர்வதால் அரசியலிலும், பொது வாழ்விலும் வெற்றியைப் பெறுவீர்கள். உங்களின் மதிப்பு உயரும். உங்களை ஒதுக்கிய உறவினர்கள்... மீண்டும். உங்களின் உறவுகளை விரும்புவார்கள்.
 
கல்வியிலும், ஆராய்ச்சி அறிவியலிலும் வளம் பெறுவீர்கள். தனித்திறமை உங்களிடம் வெளிபடும். திருமண காரியம் விரைவில் தடை நீங்கி வளம் பெறும். தொழிலில் பின்னடைவு இருந்த நிலை மாறி நல்ல தொழில் முன்னேற்றம் உண்டாகும். காரணத்திலும் ஒரு காரியம் இருக்கும் படி செயல்பாடுகளில் உங்களின் சூழ்நிலையை உருவாக்கி கொள்வீர்கள்.
 
பொது நலனில் அக்கறை கொண்டு செயல்படுவீர்கள். உங்களின் செயல்களுக்கு பக்க பலமாக உதவி செய்ய, உங்களின் நண்பர்கள் வருவார்கள். புதிய பாதையில் பயணித்து மேன்மை அடைவீர்கள். ஒரு கருத்தை மையபடுத்தி நீங்கள் பேசும் பேச்சுக்கு எதிர்பாராத நற்பலன்கள் உண்டாகும். கலைத் துறையினருக்கு கலை ஆர்வத்தின் மூலம் புதிய முயற்சிகளால் வளம் பெறுவீர்கள்.
 
புதிய ஒப்பந்தம் கிடைக்கப் பெறுவீர்கள். பெண்களின் வாழ்வில் புதிய மறுமலர்ச்சி உண்டாகும். கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்வீர்கள். வரவுக்குள் செலவு செய்து வருமானத்தை தக்க வைத்துக் கொள்வீர்கள். அதிக மனகவலைகளை நீக்கி, மனதில் அமைதியை, சாந்தத்தையும் உருவாக்கி கொள்வீர்கள்.

சந்திராஷ்டம நாட்கள்:
 
06-05-2024 திங்கள் மாலை 04-40 முதல் 08-05-2024 புதன் இரவு 07.59 மணி வரை.
 
அதிர்ஷ்ட நிறங்கள்:
 
பச்சை, மஞ்சள், வெண்மை.
 
அதிர்ஷ்ட திசைகள்:
 
தெற்கு, தென்மேற்கு, வடமேற்கு.

அதிர்ஷ்ட கிழமைகள்:
 
புதன், வியாழன், திங்கள்.

இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
 
செவ்வாய் கிழமைகளில் சுப்ரமணியருக்கு சிவப்பு பூ சாற்றி இலுப்பெண்ணெய் தீமேற்றி வேண்டிக் கொள்ள உங்களின் சகல காரியமும் வெற்றியைத் தரும்.